ஜெ.அன்பழகன் மரணம்: 62-வது பிறந்த நாளில் கொரோனா பலி வாங்கியது

DMK MLA J.Anbazhagan : ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதை தொடர்ந்து அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

J Anbazhagan passed away, J Anbazhagan no more, dmk mla J Anbazhagan death, ஜெ அன்பழகன் மரணம், திராவிட முன்னேற்றக் கழகம்

DMK MLA J Anbazhagan Passed Away: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மரணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்பழகன், இன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ளது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 2ம் தேதி கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டது.

ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதை தொடர்ந்து அவர் மரணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் வருகை : ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus chennai dmk mla j anbazhagan rela hospital m kstalin

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com