'வாழ்க்கை ஒரு வட்டம்' என நிரூபித்த சென்னை: குவியும் இ-பாஸ் விண்ணப்பம்
Normalcy in Chennai : சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த நிறுவனங்கள், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.
Normalcy in Chennai : சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த நிறுவனங்கள், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது. இதன்காரணமாக, சொந்த காரணங்களுக்காக வெளியே வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையில், இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ஈ-பாஸ் கேட்டு 2.9 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 5.8 லட்சமாக அதிகரித்துள்ளது. இவற்றில் 1.9 லட்சம் இ-பாஸ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Advertisment
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக 7,074 இ-பாஸ் விண்ணப்பங்களும், இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் 5,590 இ -பாஸ் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாள்ஒன்றுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2000 விண்ணப்பங்களும், திருவள்ளூரில் 300 மற்றும் காஞ்சீபுரத்தில் 40 விண்ணப்பங்களும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு படையெடுப்பு
Advertisment
Advertisements
சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பணியாற்றிவந்த மற்ற மாவட்டத்தினர் சென்னை திரும்ப திட்டமிட்டு இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, கடலூர் மாவட்டத்தில் 5,521 பேரும், மதுரையில் இருந்து 5,251, திருச்சியில் இருந்து 5,085, கோவையில் இருந்து 4,532, தஞ்சாவூரில் இருந்து 4,148 பேர் இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை வருவதற்காக, மற்ற மாவட்டங்களிலிருந்து 1 லட்சம் பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து 4,305, ஆந்திராவிலிருந்து 3,393 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 60 ஆயிரம் பேர், விமானம் மூலம் சென்னை வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த நிறுவனங்கள், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. ஊழியர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர்
இதுதொடர்பாக, கட்டுமானத் தொழில் அதிபர் ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் சுமார் 500 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 400 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது தொடர்பு கொண்டு எப்போது பணிக்கு வர வேண்டும் என்று கேட்கின்றனர். அதேபோல, கிளையண்ட்களும் தங்களை தொடர்பு கொள்ள துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சக்தி குழும தலைவர் மாணிக்கம் மகாலிங்கம் கூறியதாவது, சென்னை தற்போது மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வர துவங்கிவிட்டனர், இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் பழைய சென்னையை பார்க்கலாம் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் சார்பில் அவசர, அவசிய காரணங்களுக்காக, இ-பாஸ்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் மிக அதிகளவில் இ-பாஸ் விண்ணப்பங்கள் வருகின்றன. ஒருவரே வெவ்வேறு காரணங்களை கூறி, இ-பாஸ்க்கு விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது. அத்தகைய நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவின் துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil