சென்னையின் 381வது பிறந்தநாள் கொண்டாடிவரும் இவ்வேளையில், சென்னை மக்களில் 50 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல், சென்னை மக்களை மேலும் உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
Advertisment
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR), மக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா பாதிப்பு, சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய ஆய்வு நடத்தியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ‘எலிசா’ பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கண்டறியப்பட்டது.
ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர் கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தேசிய காச நோய் நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னையில் 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்தியது.
ஆய்வில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர் கூறியதாவது, “இந்த ஆய்வின் முடிவில் 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முழுமையாக முடிவடைந்த பிறகு தான் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பது தெளிவாக தெரியவரும்.
ஆய்வு விரைவில் முடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியிடம் முழு விவரங்களும் ஒப்படைக்கப்படும். இந்தியாவில் 4-ல் ஒரு பகுதியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதன்படி டெல்லியில் 23 சதவீதம் பேருக்கும், மும்பையில் 57 சதவீதம் பேருக்கும், புனேவில் 50 சதவீதம் பேருக் கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil