சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் 4584
தண்டையார் பேட்டை - 3584
தேனாம்பேட்டை - 3291
கோடம்பாக்கம் - 2966
அண்ணாநகர் - 2571
திரு.வி.க.நகர் -2550
அடையாறு -1534
வளசரவாக்கம் - 1217
திருவொற்றியூர் - 1024
அம்பத்தூர் -949
மாதவரம் 747
ஆலந்தூர் - 555
பெருங்குடி -515
சோழிங்கநல்லூர் - 493
மணலி 405
சென்னையில் மட்டும் 27,398 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13,698 பேர் குணமடைந்துள்ளனர். 275 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.20 சதவீதத்தின் ஆண்கள் என்றும், 39.80 சதவீதத்தினர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவாரியாக பாதிப்பு ( பெண்கள்)
20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் - 2,289 பேர்
30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் - 2,025 பேர்
40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் - 1,914 பேர்
50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் -1,674 பேர்
60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் - 972 பேர்
10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் - 822 பேர்
0- 9 வயதுக்குட்பட்டவர்கள் - 475 பேர்
70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் - 435 பேர்
வயதுவாரியாக பாதிப்பு ( ஆண்கள்)
20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் - 2,999 பேர்
30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் - 3,494 பேர்
40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் - 3,173 பேர்
50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் -2,716 பேர்
60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் - 1,454 பேர்
10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் - 998 பேர்
0- 9 வயதுக்குட்பட்டவர்கள் - 481 பேர்
70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் - 709 பேர்
பாதிப்பு விகிதம் ( சதவீதத்தில்)
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் - 48.2 சதவீதம்
குணமடைந்தவர்கள் - 50.8 சதவீதம்
இறந்தவர்கள் - 1 சதவீதம்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.