சென்னை ராயபுரத்தில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

Corona cases in chennai : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.20 சதவீதத்தின் ஆண்கள் என்றும், 39.80 சதவீதத்தினர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ராயபுரம் மண்டலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,584 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 4584
தண்டையார் பேட்டை – 3584
தேனாம்பேட்டை – 3291
கோடம்பாக்கம் – 2966
அண்ணாநகர் – 2571
திரு.வி.க.நகர் -2550
அடையாறு -1534
வளசரவாக்கம் – 1217
திருவொற்றியூர் – 1024
அம்பத்தூர் -949
மாதவரம் 747
ஆலந்தூர் – 555
பெருங்குடி -515
சோழிங்கநல்லூர் – 493
மணலி 405

சென்னையில் மட்டும் 27,398 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13,698 பேர் குணமடைந்துள்ளனர். 275 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.20 சதவீதத்தின் ஆண்கள் என்றும், 39.80 சதவீதத்தினர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவாரியாக பாதிப்பு ( பெண்கள்)

20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் – 2,289 பேர்
30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் – 2,025 பேர்
40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் – 1,914 பேர்
50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் -1,674 பேர்
60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் – 972 பேர்
10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் – 822 பேர்
0- 9 வயதுக்குட்பட்டவர்கள் – 475 பேர்
70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் – 435 பேர்

வயதுவாரியாக பாதிப்பு ( ஆண்கள்)

20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் – 2,999 பேர்
30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் – 3,494 பேர்
40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் – 3,173 பேர்
50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் -2,716 பேர்
60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் – 1,454 பேர்
10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் – 998 பேர்
0- 9 வயதுக்குட்பட்டவர்கள் – 481 பேர்
70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் – 709 பேர்

பாதிப்பு விகிதம் ( சதவீதத்தில்)

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் – 48.2 சதவீதம்
குணமடைந்தவர்கள் – 50.8 சதவீதம்
இறந்தவர்கள் – 1 சதவீதம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus chennai lockdown chennai corporation corona infection corona cases

Next Story
Tamil News Today: உலகளவில் எகிறும் கொரோனா தொற்று! அமெரிக்காவில் உயிரிழப்பு உச்சத்தை தொட்ட சோகம்coronavirus, coronavirus india, coronavirus pandemic, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸுக்கு முகமும் இல்லை நிறமும் இல்லை, coronavirus outbreak, coronavirus china, coronavirus latest, coronavirus india cases
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com