/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-06T144430.124-1.jpg)
corona virus, chennai, lockdown, tamilnadu, full lockdown, traffic, restrictions, shops open, transport, vehicle movement, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
சென்னையில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் மூடப்பட்டன.
இதனால் கடந்த சில வாரங்களாக சென்னை வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் சென்னையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் கூடவே இன்ன பிற கடைகளையும் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பொது முடக்க காலத்தில் அத்தியாவசியமின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பிடிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டு வந்தது. இன்று பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டதால் அந்த வாகனங்கள் அனைத்தும் உரிமையாளர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது. பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் பிடித்து வைத்திருந்த வாகனங்கள் திரும்ப வழங்கினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற http://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.