சென்னையில் புறநகர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள அறையில் தங்கி சுமார் 40 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறையில் தங்கியிருந்த 29 வயதான ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் உடன் இருந்த 39 காவலர்களையும் அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த பரிசோதனையின் முடிவில் , 4 ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil