சென்னையில் கொரோனா பாதிப்பு - மீண்டும் ராயபுரம் முதலிடம்
Corona cases in Chennai : சென்னையில் உள்ள இந்த 15 மண்டலங்களில் அதிக பாதிப்புகளை கொண்ட ராயபுரம் ( மண்டலம் 5), கோடம்பாக்கம் ( மண்டலம் 10), திரு.வி.க. நகர் ( மண்டலம் 6) ஆகியவை கருஞ்சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
Corona cases in Chennai : சென்னையில் உள்ள இந்த 15 மண்டலங்களில் அதிக பாதிப்புகளை கொண்ட ராயபுரம் ( மண்டலம் 5), கோடம்பாக்கம் ( மண்டலம் 10), திரு.வி.க. நகர் ( மண்டலம் 6) ஆகியவை கருஞ்சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் ராயபுரம் ( மண்டலம் 5) மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
சென்னையில் கொரோனா பாதிப்பின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொரோனா பாதிப்பின் விகிதம் அதிகரிப்பிற்கு சென்னையில் இயங்கி வந்த கோயம்பேடு சந்தையே முக்கிய காரணமாக கண்டறியப்பட்ட நிலையில், அந்த சந்தை தற்போது தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகள் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் பல்வேறு மாவட்டங்கள் ரெட் ஜோன், ஆரஞ்ச் ஜோன் மற்றும் கிரீன் ஜோன் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள இந்த 15 மண்டலங்களில் அதிக பாதிப்புகளை கொண்ட ராயபுரம் ( மண்டலம் 5), கோடம்பாக்கம் ( மண்டலம் 10), திரு.வி.க. நகர் ( மண்டலம் 6) ஆகியவை கருஞ்சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
மே 10ம் தேதி மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மண்டலவாரியாக சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 676 பேரும், அடுத்தப்படியாக கோடம்பாக்கத்தில் 630 பேரும், திருவிக நகரில் 556 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil