சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு மக்கள் அதிக நெருக்கடியான பகுதிகளில் வாழ்நதுவருவதே காரணம் ஆகும். மேலும் அவர்களுக்குள் உள்ள தொடர்பை தவிர்க்கும் நடவடிக்கை, அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மாநிலத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது சென்னையில், தொற்று தொடர்பு கண்டறிதல் மிகவும் கடினமானதாக உள்ளது. இதற்கு அதிக நேரம் காலம் எடுத்துக்கொள்வதால், குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சிகிச்சைக்கு உட்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. அவர்களது ஆவணங்களில் ஒரு முகவரி உள்ளது. அந்த முகவரியில் சென்று பார்த்தால் அவர்கள் இல்லை. பின் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்குள்ளாகவே போதும் போதும் என்றாகி விடுகிறது. பின் அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி என ஒருவருக்காக நாம் பல பேரை சோதனைக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது. இந்த பணிச்சுமைக்கு ஏற்ப போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாததால், அதிக காலவிரயம் ஏற்படுகிறது.
மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது சென்னையில், ஒருவருக்கு தொற்று கண்டறியப்படின், அவருடன் தொடர்புடைய ஆட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதால், அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சைக்குட்படுத்துவது என்பது இயலாத காரியம்.
சென்னையில் ஒரேபகுதிகளில் அதிக மக்கள் குவிந்திருப்பதால், அவர்களிடையே தொற்று பரவலும் மிக அதிகமாக உள்ளது. தொற்று உள்ளதாக அறியப்படும் நபர், அவரது ஆவணங்களில் முகவரியை முழுமையாக அளித்திருக்க மாட்டார். மேலும் மொபைல் எண் மாற்றியிருந்தால், அதனை அப்டேட் செய்திருக்க மாட்டார். இந்த காரணங்களினால் சம்பந்தப்பட்ட நபரை விரைந்து தொடர்பு கொண்டு சிகிச்சைக்குட்படுத்தி தொற்றை கட்டுப்படுத்துவது என்பது கடினமான காரியமாக உள்ளதாக மருத்துவ பணியாளர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, சென்னை போன்ற மெட்ரோபாலிடன் நகரங்களில் இருக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை யாதெனில், ஒருவர் தனக்கு அருகில், பக்கத்தில் இருப்பவர்களை பற்றி அறிந்து வைத்திருக்க மாட்டார். இந்த விபரங்கள் தான்,, தொற்றுநோய் கட்டுப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஏன் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது தமக்கு இதுவரை புலப்படவில்லை என்று கூறினார்.
சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, சென்னையில், தொடர்பு தடமறிதல் நிகழ்வை கண்டறிவது பெரும் சவாலான ஒன்றாக உள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மற்ற நபர்களையும் நாம் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியே மிகவும் கடினமானது.
சென்னையின் பலகுறுகலான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஒரு சிறு இடத்திலேயே 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சேரி போன்ற பகுதிகளை நாம் சொல்லவே வேணாம், அந்தளவிற்கு மக்கள் நெருக்கடி அங்கு அதிகம் இருக்கும். இந்த பகுதியில், தொற்று உள்ளவருடன் இருக்கும் நபர் இருக்கும்பட்சத்தில் அவரை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதற்குள் அந்த தொற்று மேலும் பலருக்கும் பரவியிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் வடக்கு பகுதியில், இதுவரை 111 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அப்பகுதியில் 3,081 பேருடன் தொடர்பு உள்ளது. இதில் 640 பேர் நேரடி தொடர்பு உள்ளவர்கள், 2,441 பேர் நீட்டிக்கப்பட்ட தொடர்பு கொண்டவர்கள், இவர்கள் அனைவரையும் நாம் கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்குட்படுத்த வேண்டும். ஒவ்வொரு கொரோனா பாசிட்டிவ் கேசுக்கும், குறைந்தது 30 பேரை நாம் சோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. தங்களது இந்த சோதனைக்கு பலர் ஒத்துழைப்பு நல்கிவரும்போதிலும், மனிதனால், அந்தளவுக்கு அனைவரையும் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஒருவருக்கு தொற்று உள்ளது என்பதை உறுதி செய்வதற்கே 15 நாட்கள் தேவைப்படும் நிலையில், தொற்று மேலும் பலருக்கு பரவி விடுவதாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.