corona virus, chennai, tamil nadu, corona infection, men, women, ratio, community transmission, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில், பெண்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பெண்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, சமூக பரவலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Advertisment
Advertisements
மாநிலத்தில் 9.674 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதில், இதில் ஆண் - பெண் விகிதம் சென்னையில் 60 : 40 என்ற அளவில் உள்ளது. மற்ற பகுதிகளில் இந்த விகிதள் 66 : 34 என்ற அளவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்த பேரில் ஒருவர் தான் பெண் என்ற நிலை, சென்னை தவிர்த்த மற்ற பகுதிகளில் நிலவிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள விழுப்புரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலும் இதேநிலை தான் நிலவுகிறது.
சென்னையில் 12 வயது வரையிலான கொரோனா பாதிப்பு நோயாளிகளில் 16.1 என்றளவிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7.1 என்ற அளவிலும் உள்ளது. மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது இந்த விகிதம் 10.4 மற்றும் 4.4 என்ற அளவில் உள்ளது.
தமிழக பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. பெண்களை விட ஆண்களுக்கு இந்த தொற்று அதிகமாக பரவுவதற்கான காரணம் யாதெனில், ஆண்கள் பெரும்பாலும் வெளியில் சுற்றுபவர்களாக இருப்பர். அவ்வாறு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்கையில் அதிகம் பேரிடம் தொடர்பு கொள்ள நேரிடும், இதன்காரணமாக, பெண்களை விட, ஆண்களுக்கு கொரோனா தொற்று எளிதில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
ஆனால், சென்னையில் ஆண்களுக்கு நிகராக, பெண்களுக்கு அதிகளவிலான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும்அதிர்ச்சியளிக்கிறது.
இதன்மூலம், சென்னையில், வீடுகளிலிருந்தே அதிகளவில் கொரோனா தொற்று பரவிவருவது ஊர்ஜிதமாகியுள்ளது என்று அவர் கூறினார்.
கொரோனா உள்ளிட்ட தொற்றுகளின் அடிப்படை முதற்கொண்டு நாம் ஆராயவேண்டிய நிலையில் உள்ளோம். தினமும் வயதில் மூத்தவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை கண்டறிந்து அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம், இந்த கொரோனா பரவலை குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்த இயலும் என்று குழந்தைசாமி மேலும் தெரிவித்துள்ளார்.
நகரப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு அடிப்படை சுகாதார கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாததாலேயே, அவர்கள் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக சென்னையின் முன்னணி மருத்துவர் உஷா
ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். கிராமப்புற பெண்களை ஒப்பிடும்போது பாதிக்கப்படும் பெண்களின் விகிதம் குறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil