தமிழகத்தில் 144 தடை: செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

எதிர்பார்க்கிற அபாயம் போன்ற சூழ்நிலைகளில், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 144ன் படி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது

By: Updated: March 24, 2020, 09:21:25 AM

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

144 உத்தரவு என்றால் என்ன?

எதிர்பார்க்கிற அபாயம் போன்ற சூழ்நிலைகளில், குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு, 144ன் படி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.தற்போது கொரோனா அச்சம் காரணமாக, தமிழகம் முழுவதும், தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது

144 தடை உத்தரவை தொடர்ந்து தமிழக அரசின் கட்டுப்பாடுகள் வெளியீடு :

உணவுகளை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் செயல்படத்தடை.
டீ க்கடைகளில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை.

இவைகள் எல்லாம் உண்டு

உணவுப்பொருட்களான மளிகை, காய்கறிகள், பழங்கள், பால், பால் பொருட்கள், இறைச்சி, மீன், பார்சல் உணவு வழங்கும் நிறுவனங்கள், அம்மா உணவகம், இந்திய உணவு வாரியம் மற்றும் உள்ளூர் மண்டிகளில், அரிசி, கோதுமை, கால்நடைத்தீவனங்கள்
மருந்துப்பொருட்கள், மருத்துவ பொருட்கள்ல மருத்துவ சேவைகள், சுகாதாரம் மற்றும் மருத்துவ பொருட்கள், கருவிகள் உற்பத்தி
செய்தித்தாள்கள், ஏடிஎம், வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள், பெட்ரோல், மற்றும் டீசல் பங்க்குகள், நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் கூடிய மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு, மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம், மின்சாரம், குடிநீர் சப்ளை, சுகாதார சேவைகள், எரிவாயு வினியோகம் உள்ளிட்ட சேவைகள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

இவைகளுக்கு அனுமதி

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்.
அத்தியாவசிய மற்றும் மருத்துவ பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இயங்க அனுமதி
குறைந்த பணியாளர்களுடன் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அனுமதி

இவைகள் நோ.

அரசு, தனியார் பஸ் போக்குவரத்து, சொகுசு பஸ்கள், ஆட்டோ, டாக்சி, வணிக வளாகங்கள், பணிமனைகள், அத்தியாவசியம் இல்லாத கட்டட பணிகள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கிடையாது

சிறைத்தண்டனை

144 தடையுத்தரவை மீறும்பட்சத்தில், ஆறு மாத காலம் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus corona virus in india covid19 tamil nadu 144 ban

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X