Advertisment

திருமணம், இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கணுமா? உங்களுக்கு உதவும் எண்கள் இவை

இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விண்ணப்பிப்போர், இறந்த தேதி, இறந்தவர் என்ன உறவு போன்ற விபரங்களை அளிக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona virus, covid-19, 144 ban, india lockdown, chennai police, chennai, coronavirus lockodown, special pass, marriage, death

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்களின் திருமணம், எதிர்பாராத மரணம் உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக, சென்னை காவல்துறை, சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்து மக்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

Advertisment

இந்த அவசர கால அனுமதி அட்டையை, மக்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து கீழ்க்கண்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்

ரிப்பன் மாளிகையில் உள்ள துணை ஆணையர் அலுவலகம்

பழைய வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மண்டல துணை ஆணையர் அலுவலகம்

ஷெனாய் நகரில் மத்திய மண்டல துணை ஆணையர் அலுவலகம்

அடையார் முத்துலட்சுமி சாலையில் உள்ள தேற்கு மண்டல துணை ஆணையர் அலுவலகம்

அனுமதி அட்டையை எவ்வாறு பெறுவது

அதற்கென உள்ள விண்ணப்ப படிவத்தை நிரப்பி, அதில் பயணம் மேற்கொள்ள உள்ள தேதியை குறிப்பிட வேண்டும். வாகனத்தின் பதிவு எண், வாடகை வாகனம் என்றால், டிரைவரின் லைசென்ஸ் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றை இணைக்க வேண்டும்.

திருமணத்திற்கு செல்கிறீர்கள் என்றால், திருமண அழைப்பிதழை இணைக்க வேண்டும். திருமணம் நடைபெறும் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுமதி இல்லை.

இந்த விண்ணப்ப படிவங்கள், அந்தந்த பகுதிகளின் கிராம நிர்வாக அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே, அனுமதி வழங்கப்படும்.

இறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க விண்ணப்பிப்போர், இறந்த தேதி, இறந்தவர் என்ன உறவு போன்ற விபரங்களை அளிக்க வேண்டும்.

அவசர காரணங்களுக்காக வேறு மாநிலம் செல்ல விண்ணப்பிப்போரது விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் பரிசீலனைக்காக அனுப்பப்படும்.

பத்திரிகை ஏஜென்ட்டுகள்ல தனியார் நிறுவன ஊழியர்களின் விண்ணப்பங்கள், அந்தந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பரிசீலனைக்காக அனுப்பப்படும்.

அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒரு தனி கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால், அவர்கள் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண். 75300 01100- ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gcpcorona2020@gmail.com. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Chennai Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment