அமெரிக்கா 'ரிட்டன்' இளைஞர் மூலமாக ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா
சென்னையயில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர், சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர் தனது குடும்பத்துடன் தொடர்பில் இருந்ததால், 15 வயது சிறுமி, 52 மற்றும் 76 வயது பெண்கள் மற்றும் 20 வயது இளைஞர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிராட்வே பகுதியை சேர்ந்த 50 வயது கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டெல்லியில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பிய 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 2 பேரிடம் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களும், பெருந்துறை மருத்துவமனையில் தனிமை வார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து குளித்தலை திரும்பிய 42 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக, கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil