கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம்: இஸ்லாமியர்களுக்கு பாஜக பாராட்டு

கொரோனா தொற்று இருந்து குணமடைந்தவர்களின் உடலில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து தொற்று இருப்பவர்களின் உடலில் செலுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு பிளாஸ்மா சிகிச்சை என்று பெயர்.

By: Updated: April 22, 2020, 10:05:18 PM

கொரோனா பாதிப்பிலிருந்து தற்போது மீண்டுள்ள தப்லிக் ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக தங்களது பிளாஸ்மாவை தானம் தர முன்வந்துள்ள நிகழ்வை, தமிழக பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உலகையே கொரோனா பீதி அச்சுறுத்திவந்த நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வந்தது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களாலேயே, தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக தகவல் பரவியது. இதனையடுத்து, இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாங்களாகவே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். 21 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர்களது தனிமைக்காலம் முடிவடைந்து கொரோனா தொற்று நிலையிலிருந்து அவர்கள் விடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்று இருந்து குணமடைந்தவர்களின் உடலில் உள்ள பிளாஸ்மாவை எடுத்து தொற்று இருப்பவர்களின் உடலில் செலுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைக்கு பிளாஸ்மா சிகிச்சை என்று பெயர்.

இந்த சிகிச்சை முறை கேரளாவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தற்போது அந்த சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

தப்லிக் ஜமாத் அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், பிளாஸ்மா சிகிச்சைக்காக தங்களது பிளாஸ்மாவை தர முன்வந்துள்ளனர். அவர்களின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்த பலருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதை அறிவோம். ஆனால், சிகிச்சைக்கு பின் அவர்கள் செய்ய முன்வந்திருக்கும் மிக பெரிய உதவியை நாம் அறிவோமா? திருப்பூரை சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவர், சிகிச்சைக்கு பின்னர், அம்மாவட்ட நிர்வாகத்திடம் மற்றவர்கள் யாருக்கேனும் சிகிச்சையளிக்க தன்னுடைய ‘ஊநீர்’ (Plasma) தேவைப்படுமானால் தான் வழங்க தயார் என முன்வந்துள்ளார். தேனியை சேர்ந்த முகமது உஸ்மான் அலி என்பவர் என்பவர் “தான் மட்டுமல்ல தன்னுடன் பாதிக்கப்பட்ட அனைவருமே ‘ஊநீர்’ தானம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்

டில்லியில் நேற்று நடைபெற்ற ஒரு ஊநீர் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்தது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி பிளாஸ்மா தெரபி’அல்லது ஊநீர் சிகிச்சை என்பது என்ன? ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு. இதன் அடிப்படையில் கோவிட்19 நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் எதிரணுக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகள் உடலில் செலுத்தப்படும்போது,அவர்கள் உடலில் உள்ள கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி அழிக்க அது உதவியாக இருக்கும்.என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus covid 19 tablighi jamaat tamil nadu plasma narayanan thirupathy tn bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X