தமிழக கொரோனா தடுப்பு படையில் 18 ஆயிரம் பேர் இணைவு : நீங்கள் இணைய தயாரா?
18 ஆயிரம் பேரில், 500க்கும் மேற்பட்ட டாக்டர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அரசுக்கு நோயாளிகள் தனிமைப்படுத்தலின் போது உதவுவார்கள்
கொரோனா எனும் அரக்கனை வெல்ல , சுகாதாரத்துறையுடன் கைகோர்த்து செயல்பட, டாக்டர்கள் உள்ளிட்ட 180 ஆயிரம் தன்னார்வலர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை, இந்தியாவில் மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. 144 தடை உத்தரவு, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளை கொண்டு மக்கள் அதிகம் கூடும் நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் தமிழக சுகாதாரத்துறை, இந்த கோவிட் -19 தொற்றை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் தேவை என்று டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தது. இந்த நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவோர் இணைவதற்காக www.stopcorona.tn.gov.in ஆன்லைன் போர்டலும் உருவாக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் எதிர்ப்பு படையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் டாக்டர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள் மற்றும் பொது சுகாதார பணியாளர்கள் ஆவர். அவர்களது தகுதி மற்றும் பணி அனுபவங்களை பொறுத்து அவர்களுக்கு வேலை வழங்கப்படும். இந்த படையில் இணைந்துள்ள நபர்களின் பட்டியல்கள், மாவட்ட கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோரிடம் பகிரப்படும். அவர்கள் அவர்களை முறையாக பிரித்து சம்பந்தப்பட்ட இடங்களில் பணியமர்த்துவார்கள் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த குழுவில் இணைந்த 18 ஆயிரம் பேரில், 500க்கும் மேற்பட்ட டாக்டர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரா மெடிக்கல் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் அரசுக்கு நோயாளிகள் தனிமைப்படுத்தலின் போது உதவுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil