corona virus, Covid-19, tamil nadu, prison, prisoners, parole, corona virus in India, corona test,
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக சிறைகளில் இருந்து 1,184 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
Advertisment
கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இன்று (மார்ச் 25ம் தேதி) முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு சிறைகளில் ஏற்படாமல் இருப்பதற்கு சிறைத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிறையில் கரோனா தொற்று பரவாமல்,கைதிகள் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கைதிகளை எண்ணிக்கை குறைக்க திட்டமிடப்பட்டது.
அதில், முதல் கட்டமாக சிறு குற்றங்களில் ஈடுபட்டு பிணை கிடைக்காமலும், பிணை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டும், பிணை வழங்குவதற்கு அரசு மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நீதிமன்றம் மூலம் பிணையில் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் ஆகியவற்றில் தொடரப்பட்ட வழக்குகளிலும் கைதிகளை விடுவிப்பதற்கு அனுமதி கிடைத்தது.
1,184 கைதிகள் விடுவிடுப்பு: இதில் சில நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்து 2 பெண்கள் உட்பட 53 விசாரணைக் கைதிகளையும், சிவகங்கை, தேனி, அருப்புக்கோட்டை, திருப்பத்தூா் கிளைச் சிறைகளிலிருந்து 28 கைதிகள் என மொத்தம் 81 போ் விடுவிக்கப்பட்டனா். அடுத்தக் கட்டமாக கடந்த இரு நாள்களாக மாநிலம் முழுவதும் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், கிளைச் சிறைகள் ஆகியவற்றில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் படிப்படியாக நீதிமன்றத்தின் மூலம் பிணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.
புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறப்பு சிறையில் இருந்து 36 மகளிரும், விசாரணை சிறையில் இருந்து 226 போ், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 62 போ், வேலூா் மத்திய சிறையிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்பட மொத்தம் 1,184 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறையினா் தெரிவித்தனா்.
கடந்த இரு நாள்களில் தமிழக சிறைகளில் இருந்து 1,184 கைதிகள் ஜாமீன் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனா். சிறு குற்றங்களில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் இன்னும் 4 ஆயிரம் போ் உள்ளனா். அவா்களையும் விடுவிப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil