சென்னையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க 21 தனியார் மருத்துவமனைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த மருத்துவமனைகளில் 98க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு, இதற்காக பிரத்யேகமாக ஒரு இணையதளத்தை https://covid.uhcitp.in/status/dashboard உருவாக்கியுள்ளது. அதில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. படுக்கைகளின் எண்ணிக்கை, அதில் காலியாக உள்ள படுக்கைகள், வெண்டிலேட்டர்களின் எண்ணிக்கை, பயன்பாட்டில் உள்ளவை உள்ளிட்ட தகவல்கள் அதிக இடம்பெற்றுள்ளன. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களின் விபரங்கள் அதில் இடம்பெறவில்லை.
நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், கொரோனா அறிகுறிகளுடன் இருந்த பெண்மணி, சிகிச்சைக்காக அபிராமபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்படவே, பலமணிநேர போராட்டத்திற்கு பிறகு, அவர் போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1/2
Today: A elderly lady belonging to an influential family in Chennai , highly symptomatic. COVID test was done at a private hospital in abhirampuram & came positive. NO hospital willing to admit her, NO BEDS available was the reply at govt facilities.
— Kasturi Shankar (@KasthuriShankar) June 6, 2020
இந்த டுவிட்டர் பதிவு, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியநிலையில், தமிழக அரசு, கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் உள்ளிட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது. மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு என்ற செய்தியை, சில மருத்துவமனைகள் வேண்டுமென்றே பரப்பி வருகின்றன. சென்னையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,982 ஆக உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த பிரத்யேக இணையதளத்தில், தற்போதைய நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவைகளின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து மாவட்டங்களின் விபரங்களும் பதிவேற்றப்படும்.
அரசு மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களுக்கு உரிய சிகிச்சை சரியான நேரத்தில் அளிக்க முடியாத நிலையில், சுகாதாரத்துறை உள்ளதால், தனியார் மருத்துவமனைகளின் சேவைகளை மக்கள் நாட இந்த தகவல்களை அரசு வெளியிட்டு இருப்பதாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.