கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தேவையான மருந்துகளை, தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன் அனுப்பி உதவியுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன், கொரோனா பாதிப்பால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த 2ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 3ம் தேதி முதல் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு ஆரம்பத்தில் கவலைக்கிடமான நிலையில் அன்பழகனின் உடல் நிலை இருந்தது. பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
விஜயபாஸ்கர் நேரில் ஆறுதல் : அன்பழகனை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
ஸ்டாலின் சந்திப்பு : திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று அன்பழகனிடம் உடல்நலம் விசாரித்து, மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 8ம் தேதி) மாலை முதல் உடல் நிலை கவலைக்கிடமான நிலைக்கு மாறி உள்ளது. காலையில் இருந்து மீண்டும் ஆக்ஸிஜன் தேவை அளவு அன்பழகனுக்கு அதிகரித்துள்ளது. ஜெ.அன்பழகனின் சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. அவரது ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை உதவி : அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிந்த, தெலுங்கானt கவர்னரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் , ஐதராபாத்தில் இருந்து கொரோனாவுக்கான முக்கிய மருந்தினை வாங்கி ரேலா மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். கொரோனாவுக்கான முதல் மருந்து கண்டுப்பிடிப்பை ஐதராபாத் கண்டறிந்துள்ளது. ரெம்டெசிவிர், கோவிட் 19 மருந்துகளை தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது.
ஐதராபாத்திலுள்ள காந்தி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தினைத்தான் தெலுங்கானா அரசு கொடுத்து வருகிறது. அமெரிக்க மற்றும் இத்தாலி நாடுகளில் இந்த மருந்தினை மருத்துவ வல்லுநர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், ரேலா மருத்துவமனை நிர்வாகம் வைத்த கோரிக்கையினை ஏற்று உடனடியாக ரெம்டெசிவிர், கோவிட் 19 மருந்துகளை அனுப்பி வைத்து உதவி செய்துள்ளார் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.