கொரோனா நிவாரணம் நேரடியாக வழங்க தடை: கட்சிகள், அமைப்புகள் கண்டனம்

சந்தைகள், கடைகளில் பொருள்களை மக்கள் விலைக்கு வாங்குகின்ற இடத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு, கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு வைப்பதாகும். மக்கள் பொறுமை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது.

corona virus, tamil nadu, corona infection, help, tamil nadu government, ban, condemn, dmk, vaiko, mk stalin, communist party, coronavirus india news updates, coronavirus india cases, coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
corona virus, tamil nadu, corona infection, help, tamil nadu government, ban, condemn, dmk, vaiko, mk stalin, communist party, coronavirus india news updates, coronavirus india cases, coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

தமிழகத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தன்னார்வலர்கள் யாரும்,தன்னிச்சையாக உணவு வழங்க, அரசு தடை விதித்துள்ளது. ‘கொரோனா’ பரவலை தடுக்க, இந்த கட்டுப்பாடு அவசியம் என்றும், அரசு தெரிவித்துள்ளது.இதனால், ஏழை எளிய மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உதவ விரும்புவோரும், அமைப்புகளும், முதல்வர் நிவாரண நிதிக்கு, நிதியுதவி அளிக்கலாம். பொருட்களாக வழங்க விரும்பினால், சென்னை மாநகராட்சி கமிஷனரிடமும், மற்ற மாவட்டங்களில், கலெக்டர்களிடமும் வழங்கலாம். இத்தகைய பொருட்களை, அவர்கள் தங்கள் கண்காணிப்பில், முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு, சமூக சமையல் கூடங்களில் சமைத்து, உணவு வழங்குவர். தேவைப்படும் ஏழை குடும்பங்களுக்கு, பொருட்களாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சில நபர்களும், சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக, பல்வேறு இடங்களில், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்களை, நேரடியாக வழங்குவது, தடையுத்தரவை மீறும் செயலாகும். இதுபோன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கை, நோய் தொற்று பரவ வழிவகுக்கும். எனவே, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கி, நோய் தொற்றுக்கு வழிவகுப்பதை தவிர்க்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த தடைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக – ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், #Lockdown காலத்தில் துயருறும் எளியவர்களின் பசி நீக்க, தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க உத்தரவிட எவராலும் இயலாது; தானும் செய்யாது அடுத்தவர்களையும் தடுப்பது வஞ்சகம்! இது ஜனநாயக நாடு; உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம்! ‘கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக!’ என சாடியுள்ளார்.

இதயமே வெடிக்கிறது – வைகோ

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோ வெளியிட்ட அறிக்கையில், நூறாண்டு காலத்தில் மக்கள் இதுவரை சந்தித்த கொள்ளை நோய்களுக்கு எல்லாம் உச்சகட்டமாக, கோவிட்-19 கொரோனா நாசகார நோய் மனித உயிர்களை உலகெங்கும் பலிவாங்கி வருகிறது. இதைத் தடுப்பதற்கோ, முழுமையாக குணப்படுத்துவதற்கோ உரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கோடானு கோடி மக்கள் விவரிக்க முடியாத துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், அமைப்புச் சாரா தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று பரிதவித்து நிற்பதை எண்ணினால் இதயமே வெடிக்கிறது.

சந்தைகள், கடைகளில் பொருள்களை மக்கள் விலைக்கு வாங்குகின்ற இடத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தமிழக அரசின் அறிவிப்பு, கோடானு கோடி தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு வைப்பதாகும். மக்கள் பொறுமை ஒரு கட்டத்துக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது. அதனை உணர்ந்து உடனடியாக இன்று பிற்பகலில் வெளியிட்ட அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், மனிதநேயம் உள்ளோர் உணவோ, பொருட்களோ வழங்குகின்ற இடத்தில் மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையையும், அரசு அதிகாரிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் மனித சமூகம் சந்தித்து வரும் மிகப் பெரும் சவாலாகும். தேசிய அளவிலான இயற்கை பேரிடராக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை அரசும், ஆளும் கட்சி மட்டுமே சமாளித்து விடலாம் எனக் கருதுவது அறிவார்ந்த செயலாகாது. இது தவிர கொரானா வைரஸ் தொற்று நோய் பரவல் தடுப்பு மருந்துவ கருவிகள் துணையோடு, முகக்கவசம் அணிந்து, சானிடைசர் பயன்படுத்தி, சமூக இடைவெளி கடைப்பிடித்து, தாங்க முடியாத வாழ்க்கை துயரங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகள் வழங்கி வருவதை நோய் பரப்பும் குற்றச்செயல் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசை வன்மையாகக் கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில் கூட அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொண்டர்களைப் பயன்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவது வருத்தத்திற்கு உரியது. பிரதிபலன் பாராமல் அர்பணிப்புணர்வுடன் மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை பாரபட்சமின்றி பயன்படுத்துவதே அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடும் அரசு – கமல்ஹாசன்

வறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படியும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட, தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் என பலரின் உதவியை நாடிப் பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus help tamil nadu government ban condemn dmk vaiko

Next Story
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல்15-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – திமுக அறிவிப்புdmk announced All party meeting on April 15, alla party meeting headed by DMK Stalin, ஸ்டாலின் தலைமயில் அனைத்துக் கட்சி கூட்டம், ஏப்ரல் 15ம் தேதி அனைத்து கட்சி கூட்டம், திமுக அறிவிப்பு, கொரோனா வைரஸ், govt approach on corona mission, dmk, anna arivalayam, latest tamil nadu news, latest dmk news, covid-19, coronavirus lock down
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com