எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை திட்டவட்டம் – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

coronavirus, lkg students, ukg students, tamil nadu schools, covid 19
coronavirus, lkg students, ukg students, tamil nadu schools, covid 19

coronavirus outbreak : நாளுக்கு நாள் இந்தியாவில் கொரொனா வைரஸ் அதி தீவிரம் காட்டி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  கொரானா வைரஸ் என்பது கவலை கொள்ளும் விதத்தில் அதிவேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை 81 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை அறிக்கை… அமைச்சர் பேட்டி… முதல்வர் விளக்கம்… பள்ளிகள் விடுமுறையில் உண்மை என்ன?

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் மார்ச் 16ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு விடுமுறை அறிவித்தது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, “எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறைதான். நாளை முறையான அறிவிப்பு வெளியாகும்” என்று விடுமுறை அறிவிப்பை திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? – ஆ.ராசா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus holiday announced lkg ukg students tamil nadu covid 19

Next Story
ரஜினியின் பேச்சை கிண்டல் செய்தாரா வடிவேலு? – வீடியோcomedian vadivelu about rajinikanth press meet political entry speech
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com