ZONE WISE BREAKUP OF COVID-19 POSITIVE CASES IN CHENNAI:தமிழகத்தில் நேற்று (மே.20) நிலவரப்படி, 743 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 557 பேர். ஒட்டுமொத்த அளவில் 13,191 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 987 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 5,882 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,219 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 87 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள்.
Advertisment
se
சென்னையில் அதிகபட்சமாக 557 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மண்டலங்களில் 8 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.