Advertisment

ஹாய் கைய்ஸ் : துல்லிய ரிசல்ட் வேண்டுமெனில் காத்திருப்பதில் தவறில்லையே...

முடிவுகள் தெரிவதற்கு, 24 மணி நேரம் ஆகலாம். ஆனால் முடிவுகள் துல்லியமாக இருக்கும்.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹாய் கைய்ஸ் : துல்லிய ரிசல்ட் வேண்டுமெனில் காத்திருப்பதில் தவறில்லையே...

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரா நிகழ்ச்சிக்கு போவோம்.

Advertisment

சீனாவில், ஒருவருக்கு, 'கொரோனா' பாதிப்பு உள்ளதா என்பதை, அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து, 15 நிமிடங்களில் உறுதி செய்து விடுகின்றனர். ஆனால் இந்தியாவில், இதற்கு, 24 மணி நேரம் படபடக்கும் இதயத்தோடு காத்திருக்க வேண்டும்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சர்வதேச செய்திகளின் படி, சீனா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில், 'பயோமெடோமிக்ஸ்' என்ற அமெரிக்க கம்பெனி தயாரித்துள்ள பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில், 15 நிமிடங்களில் தொற்று இருக்கிறதா, இல்லையா என்பது தெரிந்து விடும்.ஆனால், 80 சதவீதம் மட்டுமே முடிவுகள் சரியாக இருக்கும் என, குறிப்பிட்ட அமெரிக்க கம்பெனியே கூறியுள்ளது.நம் நாடடில், பரிசோதனை கூடத்தில், 'ரிவர்ஸ் டிரான்ஸ்க்ரிப்சன் - பாலிமெரெஸ் செயின் ரியாக் ஷன்' எனப்படும் முறையில், ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. முடிவுகள் தெரிவதற்கு, 24 மணி நேரம் ஆகலாம். ஆனால் முடிவுகள் துல்லியமாக இருக்கும்.

ஆசம் அட்டகாசம்..

ஹாய் கைய்ஸ் : இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்...இல்லையேல் நகரமே நரகம் தான்

ஹாய் கைய்ஸ் : கொரோனா ரொம்ப பரவியிட்டு இருக்கு ; சூதானமா இருந்துக்கோங்க நட்'பூ'ஸ்...

கொரோனா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஷாப்பிங் மால்' உள்ளிட்ட, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே, வெளியே வருகின்றனர். இதனால், நாடு முழுவதும், நகை கடைகளுக்கு வருவோர் எண்ணிக்கை, 25 சதவீதமாக குறைந்துள்ளது. இது, நிதி ஆண்டின் இறுதி மாதம் என்பதால், வரி தொடர்பான கணக்குகளை முடிக்க வேண்டும். ஜி.எஸ்.டி., மற்றும் முன்கூட்டியே செலுத்தும் வருமான வரி போன்றவற்றுக்கு இடையே, விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

முடியல

கொரோனா வைரஸ் தாக்குதலால் கடந்தவாரம் வரையில், 5,000க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்; மேலும், உலகளவில் 145 நாடுகளில் 1.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டதால் உலகெங்கிலும் கிட்டத்தட்ட 300 மில்லியன் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஏற்கனவே, 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 300 மில்லியின் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ள நிலையில், மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் மூடுமாறு பல்வேறு நாட்டு அரசுகள் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஐயகோ..

உலகில் பல நாடுகள் பல்வேறு ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. இந்நிலையில் 2018 நவம்பர் மாத நிலவரப்படி, விண்வெளியில் 1950 செயற்கைக்கோள்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதில் அதிகபட்சமாக 846 செயற்கைக் கோள்கள் வணிக பயன்பாட்டுக்கானவை. ஒட்டுமொத்த செயற்கைக்கோள்களில் முதலிடத்தில் அமெரிக்கா (830 செயற்கைக் கோள்கள்) உள்ளது. அடுத்த ஒன்பது இடங்களில் இடங்களி சீனா 280, ரஷ்யா 147, ஜப்பான் 75, பிரிட்டன் 54, இந்தியா 54, கனடா 37, லக்சம்பர்க் 33, ஜெர்மனி 29 ஆகிய நாடுகள் உள்ளன.

பிரேவோ.

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம் .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Isro Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment