Corona Virus TN Reports Today: தமிழகத்தில் இன்று (ஜூன் 21) ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆகவும், பலி எண்ணிக்கை 757 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று மேலும் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 52 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 59,377 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 86 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 31,401 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 8,92,612 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி
சென்னையில் இன்று 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் 41,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர்த்து இன்று, செங்கல்பட்டில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், கடலூரில் 102 பேருக்கும், வேலூரில் 87 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னை - 1,493, செங்கல்பட்டு - 121, கடலூர் - 102, திருவள்ளூர் - 120, வேலூர் - 87, திருவண்ணாமலை - 77, மதுரை - 69, காஞ்சிபுரம் - 64, தஞ்சை - 49, திருச்சி - 36, திருவாரூர் - 30, விழுப்புரம் - 30, ராமநாதபுரம் - 30, நெல்லை - 28.
இன்று சென்னையில் 43 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் என மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 37 பேர் அரசு மருத்துவமனையிலும், 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
சென்னை - 1,493, செங்கல்பட்டு - 121, கடலூர் - 102, திருவள்ளூர் - 120, வேலூர் - 87, திருவண்ணாமலை - 77, மதுரை - 69, காஞ்சிபுரம் - 64, தஞ்சை - 49, திருச்சி - 36, திருவாரூர் - 30, விழுப்புரம் - 30, ராமநாதபுரம் - 30, நெல்லை - 28.