Advertisment

தமிழகத்தில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு: இதுவரை பலி எண்ணிக்கை 1385

COVID-19 Cases Chennai: வேலூர் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India's recovery rate, corona recovery raid, corona in india, corona in tamil nadu, கொரோனா, குணமடைந்தோர் விகிதம் 50.60

India's recovery rate, corona recovery raid, corona in india, corona in tamil nadu, கொரோனா, குணமடைந்தோர் விகிதம் 50.60

Corona Virus Cases in Tamil Nadu Today: தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று இன்று காலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

(ஜூலை. 3) நேற்று நிலவரப்படி புதிதாக 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,264 பேர் தமிழகத்தை சேர்ந்தவர். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 12 லட்சத்து 70 ஆயிரத்து 720 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 2,621 பேர் ஆண்கள், 1,708 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 63,016 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 39,683 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2082 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,689-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 91 ஆய்வகங்கள் (அரசு-48 மற்றும் தனியார் 43) உள்ளன. இன்று மட்டும் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 378 ஆக உள்ளது.

12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 5,053 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 85 ஆயிரத்து 305 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 ஆயிரத்து 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 64 பேர் உயிரிழந்தனர். அதில், 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 42 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,385 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு: மாவட்ட வாரியாக

சென்னை - 2,082

செங்கல்பட்டு - 330

மதுரை - 287

திருவள்ளூர் - 172

தி.மலை - 151

வேலூர் - 145

தேனி - 126

காஞ்சிபுரம் - 121

சேலம் - 99

ராணிப்பேட்டை - 90

க.குறிச்சி - 85

ராமநாதபுரம் - 73

விருதுநகர் - 65

சிவகங்கை - 53

குமரி - 53

திருச்சி- 47

நெல்லை- 41

கோவை- 36

விழுப்புரம் - 33

திருப்பத்தூர் - 33

தூத்துக்குடி - 27

கடலூர் - 20

புதுக்கோட்டை - 18

திருவாரூர் - 17

நாகை - 17

திண்டுக்கல் - 17

ஈரோடு - 14

கிருஷ்ணகிரி - 14

தர்மபுரி - 14

தஞ்சை - 13

திருப்பூர் - 5

தென்காசி - 4

கரூர் - 4

நாமக்கல் - 4

நீலகிரி - 1

என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment