Advertisment

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 66 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 10,000-ஐ நெருங்கியது

COVID 19 TN Reports: தமிழகத்தில் புதிதாக 447 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covid cases in Chennai

Covid cases in Chennai

Corona Virus in Tamil Nadu Reports Today: தமிழகத்தில் புதிதாக 447 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண முடிகிறது. எனினும், இந்த எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம், விரைவில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று (மே 14) புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆகவும், பலி எண்ணிக்கை 66 ஆகவும் அதிகரித்துள்ளது.

மே.16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 253 ஆண்கள் மற்றும் 194 பெண்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது. சென்னையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,365 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக பரிசோதனை மையங்களை கொண்டதாக தமிழகம் உள்ளது. 38 அரசு மற்றும் 20 தனியார் மையங்கள் என 58 சோதனை மையங்கள் மூலம் இன்று மட்டும் 11,965 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,92,432 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் சோதனையிடப்பட்ட 19 லட்சம் மாதிரிகளில் தமிழகத்தில் தான் அதிகமாக 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாட்டிலேயே 0.68 சதவீதம் என்ற குறைந்த இறப்பு விகிதத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு சிறந்த சிகிச்சை முறைகளே காரணம்" என்று அவர் கூறினார்.

டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 7,365 பேர்.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,91,432.

மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,80,023.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 11,965.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,476.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 447.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 253 பேர். பெண்கள் 194 பேர்.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 64 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,240 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 363 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 5,274 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 5,637ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 5000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்த நகரமாக உள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கைகளைவிட அதிகம் உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் 495, செங்கல்பட்டு 416, கடலூரில் 413, அரியலூர் 348, விழுப்புரத்தில் 306, காஞ்சிபுரத்தில்164, கோவையில் 146, பெரம்பலூரில் 137, திருவண்ணாமலையில் 136 என தொற்று எண்ணிக்கை உள்ளது. மதுரையில் 132, திருப்பூர் 114, திண்டுக்கல்லில் 112 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

14 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 23 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 555 பேர். இதில் ஆண் குழந்தைகள் 303 பேர். பெண் குழந்தைகள் 252 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 8,444 பேர். இதில் ஆண்கள் 5,667பேர். பெண்கள் 2774 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 675 பேர். இதில் ஆண்கள் 419 பேர். பெண்கள் 256 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment