TN Corona Today Report: தமிழகத்தில் இன்று (ஆக.03) ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது
இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,577 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 32 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 122 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 63) மூலமாக, இன்று மட்டும் 58,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 28 லட்சத்து 37 ஆயிரத்து 273 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,295 பேர் ஆண்கள், 2,314 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,59,435 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,03,760 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 02 ஆயிரத்து 283 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 109 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,241 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,698 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 044 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து 207 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32 ஆயிரத்து 971 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா
சென்னையில், இன்று ஒரே நாளில் 1021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,02,985 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,303 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 88,826 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,983 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,176 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு
சென்னை- 1021
ராணிப்பேட்டை- 382
விருதுநகர்- 348
திருவள்ளூர்- 332
செங்கல்பட்டு-331
காஞ்சிபுரம்- 322
தேனி- 305
கோவை - 227
குமரி - 215
தூத்துக்குடி-215
தி.மலை -212
கடலூர்-167
வேலூர் -134
மதுரை -106
திருச்சி-101
விழுப்புரம் - 90
புதுக்கோட்டை- 86
நெல்லை- 85
தென்காசி- 75
திண்டுக்கல்- 75
கிருஷ்ணகிரி- 67
க.குறிச்சி- 66
சேலம்- 66
சிவகங்கை- 64
ராமநாதபுரம்- 62
திருப்பூர்- 45
திருப்பத்தூர்- 44
நாமக்கல்- 43
நீலகிரி -37
நாகை- 32
அரியலூர்- 20
பெரம்பலூர் -19
கரூர்-19
தஞ்சை-18
திருவாரூர்- 18
ஈரோடு - 13
தர்மபுரி - 4
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil