Advertisment

தமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Chennai COVID-19 Reports: சென்னையில் இன்று 993 பேர் கொரோனாவால் பாதிப்பு

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா - 5,633 பேர் டிஸ்சார்ஜ்

இன்று 5,633 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

TN Corona Cases Today Report: தமிழகத்தில் இன்று (ஆக.,12) ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,844 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 27 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 133 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-72) மூலமாக, இன்று மட்டும் 69,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 34 லட்சத்து 32 ஆயிரத்து 025 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,521 பேர் ஆண்கள், 2,350 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,89,677 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,24,814 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப் போகின்றனர்? – ஐகோர்ட்

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். அதில், 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,278 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,929 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 378 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 59 ஆயிரத்து 609 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 39 ஆயிரத்து 533 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,871 பேரில் 993 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,12,059 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,370 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று: மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்

அரியலூர் - 65

செங்கல்பட்டு - 439

சென்னை -993

கோவை - 294

கடலூர் - 339

தர்மபுரி - 14

திண்டுக்கல் - 40

ஈரோடு -49

கள்ளக்குறிச்சி - 11

காஞ்சிபுரம் - 371

கன்னியாகுமரி - 117

கரூர் - 40

கிருஷ்ணகிரி - 6

மதுரை - 169

நாகை - 72

நாமக்கல் - 32

நீலகிரி - 23

பெரம்பலூர் -19

புதுக்கோட்டை - 147

ராமநாதபுரம் - 61

ராணிப்பேட்டை - 254

சேலம் - 217

சிவகங்கை - 92

தென்காசி - 99

தஞ்சை - 59

தேனி - 171

திருப்பத்தூர் - 72

திருவள்ளூர் - 407

திருவண்ணாமலை - 123

திருவாரூர் - 7

தூத்துக்குடி - 157

திருநெல்வேலி - 137

திருப்பூர் - 80

திருச்சி - 135

வேலூர் - 45

விழுப்புரம் - 98

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment