Advertisment

தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு; எண்ணிக்கை 690ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus in tamil nadu, Corona live updates

Corona cases in India

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் 69 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, "தமிழகத்தில் இதுவரை 5305 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 63 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கோடைக்கு இதமாக திடீர் மழை: எந்தெந்த மாவட்டங்களில்?

மற்றவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டவர்கள். இந்த எண்ணிக்கையில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 39 பேர். இதுவரை சென்னையில் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு கண்காணிப்பில் 253 பேர் உள்ளனர். 28 நாட்கள் காண்காணிப்பு முடிந்து 27,416 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த 64 வயதான பெண் இன்று சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் இருந்தது" என்றார்.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 690ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment