சென்னையில் 452 பேருக்கு கொரானா பாதிப்பு: 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்
COVID-19 Cases in Chennai: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
Latest Corona Reports in Tamil Nadu: தமிழகத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
நேற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 114. மொத்தமாக குணம் அடைந்தோர் எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது. நே, ற்றுஇருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 72,403 கொரோனா தொற்று மாதிரிகள் வாங்கப்பட்டுள்ளது. நேற்று, மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதனை வாங்கப்பட்டுள்ளது . இதுவரை 65,834 நபர்களுக்கும், நேற்று மட்டும் 5,882 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த 5,882 பரிசோதனையில் தான் நேற்று 72 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டுக்கண்காணிப்பில் 25,303 பேர் உள்ளனர். கண்காணிப்பு முடித்தவர்கள் எண்ணிக்கை 87,159 ஆகும். தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் பாதிப்பு: 1,755
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 22
குணமடைந்தோர் எண்ணிக்கை : 866
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, நேற்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
சென்னை – 52
கோவை - 7
காஞ்சிபுரம் - 1
மதுரை – 4
ராமநாதபுரம் – 2
சேலம் – 1
தென்காசி – 1
திருவள்ளூர் - 2
திருவண்ணாமலை - 1
விருதுநகர் – 1
என மொத்தம் தமிழகத்தில் 72 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”