Latest Corona Reports in Tamil Nadu: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை தாக்கினால் தண்டனை பெறும் வகையில் தொற்றுநோய் சட்டம் 1897 இல் இன்று கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் .
Advertisment
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
Advertisment
Advertisements
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது. 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டுக்கண்காணிப்பில் 23,760 பேரும், அரசுக்கண்காணிப்பில் 155 பேரும் உள்ளனர். கண்காணிப்பு முடித்தவர்கள் எண்ணிக்கை 87,159 ஆகும். இதுவரை, சுமார் 59 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும், 5978 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் பாதிப்பு: 1,629
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 18
குணமடைந்தோர் எண்ணிக்கை : 662
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
அரியலூர் - 2
சென்னை – 15
திண்டுக்கல் – 1
காஞ்சிபுரம் - 1
மதுரை - 4
தஞ்சாவூர் - 5
திருவள்ளூர் - 2
திருவண்ணாமலை - 1
திருச்சி – 1
விழுப்புரம் – 1
என இன்று மட்டும் தமிழகத்தில் 33 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”