Latest Corona Reports in Tamil Nadu: தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 752 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த தொற்றுக்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 90. இதன்மூலம், மொத்தமாக குணம் அடைந்தோர் எண்ணிக்கை 752 ஆக உயர்ந்துள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 65,977 கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 6,954 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 59,952 நபர்களுக்கும், இன்று மட்டும் 6,880 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டுக்கண்காணிப்பில் 23,303 பேரும், அரசுக்கண்காணிப்பில் 106 பேரும் உள்ளனர். கண்காணிப்பு முடித்தவர்கள் எண்ணிக்கை 87,159 ஆகும். தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 10 தனியார் ஆய்வகங்கள் என 33 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் பாதிப்பு: 1,683
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 20
குணமடைந்தோர் எண்ணிக்கை : 752
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு
மாவட்டம் வாரியாக, இன்று புதிதாக தொற்று அதிகரித்திருக்கும் எண்ணிக்கை,
செங்கல்பட்டு - 1
சென்னை – 27
தர்மபுரி - 1
திண்டுக்கல் – 3
மதுரை – 2
நாமக்கல் - 4
ராமநாதபுரம் - 1
சேலம் - 5
தென்காசி - 1
தஞ்சாவூர் – 1
திருநெல்வேலி - 1
திருப்பத்தூர் – 1
திருப்பூர் - 1
திருவாரூர் - 1
விழுப்புரம் – 1
விருதுநகர் - 3
என இன்று மட்டும் தமிழகத்தில் 54 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.