Corona Virus in TN Cases Today: தமிழகத்தில் இன்று (ஆக.,02) ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 65 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 122 ஆய்வகங்கள் (அரசு-59 மற்றும் தனியார் 63) மூலமாக, இன்று மட்டும் 60,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27 லட்சத்து 79 ஆயிரத்து 062 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,489 பேர் ஆண்கள், 2,386 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,56,140 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,01,446 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 98 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 75 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,132 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 56,998 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 12 ஆயிரத்து 790 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 589 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32 ஆயிரத்து 234 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா:
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,065 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 446 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும், விருதுநகரில் 337 பேருக்கும், திருவள்ளூரில் 317 பேருக்கும், தேனியில் 307 பேருக்கும், தூத்துக்குடியில் 271 பேருக்கும், திருநெல்வேலியில் 201 பேருக்கும், கன்னியாகுமரியில் 200 பேருக்கும், மதுரையில் 178 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று சென்னையில் 17 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், கோவையில் 7 பேரும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகரில் தலா 6 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தென்காசியில் தலா 4 பேரும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூரில் தலா 3 பேரும், தருமபுரி, திண்டுக்கல், திருப்பூர், வேலூரில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,303 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 87,604 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 674 பேரும், திருவள்ளூரில் 376 பேரும், காஞ்சிபுரத்தில் 311 பேரும், ராணிப்பேட்டையில் 259 பேரும், தூத்துக்குடியில் 241 பேரும், வேலூரில் 231 பேரும், கோவையில் 224 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil