தமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கொரோனா; 6,005 பேர் டிஸ்சார்ஜ்

Chennai COVID-19 Cases: சென்னையில் இன்று 986 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் தொற்று பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு 1,11,054 ஆக உயர்ந்தது

Corona Virus Cases in TN Today: தமிழகத்தில் இன்று (ஆக.11) 5,834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 6,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.50 லட்சத்தை கடந்தது

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் இன்று 5,834 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,814 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 131 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-70) மூலமாக, இன்று மட்டும் 67,492 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 33 லட்சத்து 60 ஆயிரத்து 450 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,377 பேர் ஆண்கள், 2,457 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,86,156 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,22,464 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 6,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். அதில், 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,159 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,810 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 113 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 54 ஆயிரத்து 740 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 38 ஆயிரத்து 796 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,11,054-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1108 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 11,130 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,350 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை

அரியலூர் – 86
செங்கல்பட்டு – 388
சென்னை – 986
கோவை – 324
கடலூர் – 281
தர்மபுரி – 8
திண்டுக்கல் – 150
ஈரோடு – 17
கள்ளக்குறிச்சி – 74
காஞ்சிபுரம் – 330
கன்னியாகுமரி – 192
கரூர் – 31
கிருஷ்ணகிரி – 43
மதுரை – 90
நாகை – 53
நாமக்கல் – 10
நீலகிரி – 5
பெரம்பலூர் – 35
புதுக்கோட்டை – 64
ராமநாதபுரம் – 36
ராணிப்பேட்டை – 333
சேலம் – 206
சிவகங்கை – 55
தென்காசி – 136
தஞ்சாவூர் – 125
தேனி – 297
திருப்பத்தூர் – 37
திருவள்ளூர் – 362
திருவண்ணாமலை – 161
திருவாரூர் – 88
தூத்துக்குடி – 110
திருநெல்வேலி – 136
திருப்பூர் – 37
திருச்சி – 86
வேலூர் – 181
விழுப்புரம் – 91
விருதுநகர் – 180
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 0
உள்நாடு – 8
ரயில் நிலைய கண்காணிப்பு – 2

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus in tamil nadu today report 5834 cases chennai covid 19 cases

Next Story
எடப்பாடி தான் முதல்வர் வேட்பாளர் – ராஜேந்திர பாலாஜி : சூடு பிடிக்க துவங்கியது அரசியல் களம்Tamil nadu, assembly election, Edappadi Palanichami, CM candidate, admk., minister Rajendra balaji, party supremo, minister sellur raju, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X