Advertisment

தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கொரோனா உறுதி - ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

COVID-19 Tamil Nadu Report: கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus in tamilnadu news 509 cases covid 19 tn latest report

corona virus in tamilnadu news

Corona Latest TN Reports:  சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 6,984 பேர்.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,79,467.

மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,68,250.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 12,780.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 9,227.

இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 509.

தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 288 பேர். பெண்கள் 221 பேர்.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 42 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,176 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 64 ஆக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 380 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 4,882 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 5000 என்ற தொற்று எண்ணிக்கையைக் கடந்த நகரமாக உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் தொடர்ந்து 2-ம் இடத்தில் 492 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. மூன்றாம் இடத்தில் செங்கல்பட்டு வந்துள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 416 ஆக உள்ளது.

கடலூரில் 413 என்ற தொற்று எண்ணிக்கையுடன் 4-ம் இடத்தில் உள்ளது. 5-ம் இடத்தில் அரியலூர் 348 ஆக உள்ளது. விழுப்புரம் 6-ம் இடத்தில் 306 ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் தொற்று எண்ணிக்கை 156 ஆக உள்ளது.

கோவையில் 146, பெரம்பலூரில் 133, திருவண்ணாமலையில் 128 என தொற்று எண்ணிக்கை உள்ளது, மதுரையில் 123, திருப்பூரில் 114, திண்டுக்கல்லில் 111 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

17 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 20 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 529 பேர். இதில் ஆண் குழந்தைகள் 283 பேர். பெண் குழந்தைகள் 246 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 8,068 பேர். இதில் ஆண்கள் 5,462 பேர். பெண்கள் 2,603 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர்.

60 வயதுக்கு மேற்பட்டோர் 630 பேர். இதில் ஆண்கள் 391 பேர். பெண்கள் 239 பேர்.

15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 33.

15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 4.

கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் 20 பேருக்குத் தொற்று உள்ளதால் பச்சை மண்டலத்தை இழந்தது.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment