corona virus, india lockdown chennai, bihar, kids, chennai corporation, birthday, shristi kumari, divya kumari,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil, , chennai news
தேசிய ஊரடங்கு காரணமாக, சென்னை சமூக நல கூடத்தில் தங்கியுள்ள பீகார் குழந்தைகளுக்கு சென்னை கார்ப்பரேசன் அதிகாரிகள் பிறந்தநாள் கொண்டாடிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு சென்று வந்த அவர்கள் திருப்பதி செல்வதற்காக கடந்த மார்ச்24ம் தேதி வாக்கில், சென்னை வந்திருந்தனர்.
Advertisment
Advertisements
இவர்கள் திருப்பதி புறப்பட இருந்த சமயத்தில், நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இதனையடுத்து அவர்கள் மண்டலம் 5 பகுதியில் உள்ள ராயபுரத்தில் தங்கியிருந்தனர். பின்னர் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகளின் துணையுடன் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
They are not just stranded ppl. They are not just inmates at our Relief Centres. They are one among us. @chennaicorp staff celebrating birthday of a young girl at one of our Relief Centres. Heartening to see this pic.twitter.com/E21SGTqx2R
இவர்களுக்கு தேவையான வசதிகள் மருத்துவ உதவிகள் போன்றவை, அடையார் (மண்டலம்13) அதிகாரி திருமுருகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவைகள் சேகரிக்கப்பட்டதில், அந்த குழுவில் உள்ள சிருஷ்டி குமாரி மற்றும் திவ்ய குமாரிக்கு ஏப்ரல் 11 மற்றும் 12ம் தேதிகளில் 12வது பிறந்தநாள் வருவது தெரியவந்தது.
இவர்களது பிறந்தநாளை வெகுவிமரிசையாகவும், அதேசமயம் அவர்களுக்கு சர்பிரைசாகவும் நடத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.
ஏப்ரல் 12ம் தேதி, அந்த கூடத்திற்கு வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆல்பி ஜான் மற்றும் மேகநாத் ரெட்டி தலைமையில் அந்த சிறுமிகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அவர்களுக்கு அதிகாரிகள் சுவீட் பாக்ஸ்களை அன்பளிப்பாக வழங்கினர்.
துணை ஆணையர் ( வருவாய்) மேகநாத் ரெட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த சமுதாய நலக்கூடத்தில் தங்கியுள்ளவர்களை நாங்கள் எனது குடும்பமாகவே பார்க்கிறோம், அவர்களை அன்னியமாக நாங்கள் பார்க்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
தெற்கு மண்டல துணை ஆணையர் ஆல்பி ஜான், பீகார் சிறுமிகளின் இந்த பிறந்தநாளை அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய அடையார் பகுதி மாநகராட்சி ஊழியர்களுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வை, தங்களால் எப்போதும் மறக்க இயலாது என்று பிறந்தநாள் கொண்டாடிய சிருஷ்டி குமாரி மற்றும் திவ்யா குமாரி தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil