மஞ்சள், புளி, தேன், வேப்பிலை..! நடிகர் சந்தானத்திடம் சத்குரு சொன்ன அட்வைஸ்
Actor Santhanam : ஆன்மீகத்தின் மீது தனக்கு அளவு கடந்த ஈடுபாடு உள்ளதாகவும், அதை நாடு முழுவதும் அதிகம் பரவச்செய்ய வேண்டும் என்று சத்குரு உடனான உரையாடலில் நடிகர் சந்தானம், தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
ஆன்மீகத்தின் மீது தனக்கு அளவு கடந்த ஈடுபாடு உள்ளதாகவும், அதை நாடு முழுவதும் அதிகம் பரவச்செய்ய வேண்டும் என்று சத்குரு உடனான உரையாடலில் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
Advertisment
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எந்த நிறுவனங்களும் செயல்படவில்லை. மக்கள், நடிகர்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
நடிகர் சந்தானம், இந்த ஊரடங்கு நேரத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவ்விடம் வீடியோ காலில் உரையாற்றினார்.
சந்தானம் : கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?
சத்குரு : அது நம் கலாச்சாரத்திலேயே இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் வாழ்த்திருக்கோம். பாரம்பரியமாக நாம் சாப்பிடும் உணவிலேயே ஒரு தன்மை இருக்கிறது. ஆனால் சிலர் அது விஞ்ஞானபூர்வமாக இல்லை என்கிறார்கள். லேப்பில் பரிசோதித்து உறுதியானால் தான் விஞ்ஞானம் என்கிறார்கள்.
மஞ்சள், புளி, தேன், வேப்பிலை என பல பொருட்கள் இருக்கின்றன. அதை சாப்பிட்டாலே நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் சுடுதண்ணீரில் மஞ்சள் போட்டு கொதிக்கவைத்த, தேன், மொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து தினமும் 5 முறை அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆன்மீகத்தின் மீது தனக்கு அளவு கடந்த ஈடுபாடு உள்ளதாகவும், அதை நாடு முழுவதும் அதிகம் பரவச்செய்ய வேண்டும் என்று சத்குரு உடனான உரையாடலில் நடிகர் சந்தானம், தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil