சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 12 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertisment
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய நிலையில் பலத்த காவல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் வழக்கமான நாட்களை போலவே மக்கள் ஊர் சுற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். அதையறிந்த போலீசார் அந்த பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அதில் காலாவதியான பாஸ் வைத்திருந்தவர்கள், காரணமின்றி வெளியே வந்தவர்களின் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Chennai lockdown : சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தகுந்த ஆவணங்கள் இன்றி வாகனங்களில் வந்தோரை சோதனை செய்த போலீசார். இடம் : அண்ணாநகர்
Advertisment
Advertisements
Chennai lockdown : வாகன சோதனையில் போலீசார்
Chennai lockdown : சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தகுந்த ஆவணங்கள் இன்றி வாகனங்களில் வந்தோரை சோதனை செய்த போலீசார். இடம் : அண்ணாநகர்
Chennai lockdown : வெறிச்சோடி கிடக்கும் அண்ணாசாலை
Chennai lockdown : வெறிச்சோடி கிடக்கும் அண்ணாசாலை
Chennai lockdown : வாகன போக்குரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பாலம் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
Chennai lockdown : திருமங்கலம் பகுதியில் டுரோன் மூலமான கண்காணிப்பை ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்
Chennai lockdown : டுரோன் பார்வையில் வெறிச்சோடிய சென்னை
Chennai lockdown : கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள டுரோன்.
சென்னையில் 288 இடங்களில் நடைபெறும் சோதனையில் , விதிகளை மீறியதாக 500 மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil