காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பசியால் வாடும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் டி.வி.எஸ், யமகா போன்ற தொழிற்சாலைகள் உள்ளன. இதில், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களை சேர்ந்த சுமார் 1600 தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இதே போல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிபேட்டை மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சேலையனூர், ஆரனேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரணம் இதுவரை சென்றடையவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக ஒரு வேலையில்லாமலும் உணவில்லாமலும் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அரசின் நிவாரணம் வழங்க உத்தரவிடக்கோரி செங்கல்பட்டை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கால் தமிழகத்தில் சிக்கியுள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தங்கியுள்ள 86 ஆயிரத்து 844 வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர், வல்லம், இருங்காட்டுக்கோட்டை, பள்ளிப்பாக்கம், ஒரகடம் மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் பணிகள் நடந்து வருவதாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை என மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கள் குறத்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 26 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Corona virus lockdown chennai migrant workers chennai high court
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!