நீதிபதிகள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் - சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
Chennai high court : சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம்.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூன் 30 வரை நீதிபதிகள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
Advertisment
கொரோனா பரவலை தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு கூடி, விவாதித்தது.இக்குழு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நான்கு மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை சம்பந்தப்பட்ட முதன்மை நீதிபதிகள் குறைப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களிலும் தற்போது போல தொடர்ந்து செயல்படவும் உயர் நீதிமன்ற நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil