corona virus, lockdown, chennai, tangedco, corona infection, corona tests, Covid 19, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
சென்னையில் மின்வாரிய துறையில் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்காக பணியாற்றி வரும் முதன்மை பணியாளர்களான டாக்டர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் உருவான பரபரப்பு அடங்குவதற்குள், மின் வாரியத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
இதுதொடர்பாக, தமிழக மின்வாரியத்துறை இஞ்ஜினியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதம், சென்னைக்கு வெளியில் இருந்த மின்வாரியத்துறை இஞ்ஜினியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்துறையில் 7 ஊழியர்களுக்கும், 3 ஒப்பந்த பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் கொரோனா பாதிப்பு பகுதிகளில் பணிக்கு செல்லாமல், பராமரிப்பு பணிகளையே மேற்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக ஏற்பாடாக, அந்த அலுவலகம் அண்ணா சாலை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil