சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பித்து உள்ளீர்களா? - இதோ இவர்களுக்கு எல்லாம் அனுமதி
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும். இவர்களில் 111 பேருக்கு அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும். இவர்களில் 111 பேருக்கு அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஏப்., 14 வரை, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் வசிப்போர், திருமணம், உறவினர் இறப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த காரணங்களுக்காக, பிற மாவட்டம், மாநிலம் என, எங்கும் செல்ல முடியவில்லை. இதற்காக, சென்னை மாநகர காவல் துறை சார்பில், அவசர கால சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, அனுமதி சீட்டு வழங்கும் பணி துவங்கியுள்ளது. திருமணம், உறவினர் இறப்பு மற்றும் மருத்துவம் தொடர்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோர், அதற்கான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை கடிதத்தை சமர்பிக்க வேண்டும்.
அனுமதி சீட்டு பெற, 75300 01100 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., மற்றும், 'வாட்ஸ் ஆப்' செயலியில் தகவல் அனுப்பலாம்.மேலும், gcpcorona 2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம் என, போலீஸ் கமிஷனர் அலுவலகம், அறிவித்தது.
111 பேருக்கு அனுமதி : இந்த கோரிக்கை கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் முறையான காரணங்கள், உரிய ஆவணங்கள் உடன் பரிசீலிக்கப்பட்ட நிலையில், 111 பேருக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil