கொரோனா ஊரடங்குக்கு முன்பே திருமணம் முடிந்த நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஐஏஎஸ் அதிகாரி என்று கூறியவரை, போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. இவர், கொரோனா ஊரடங்குக்கு முன்னதாகவே, கோவையை சேர்ந்த பெண்ணை எளிய முறையில் திருமணம் செய்திருந்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, கொடைக்கானலில் பிரமாண்டமாக வைக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு குறுக்கிடவே, திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிப்போனது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
எப்படியாவது, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியே தீரவேண்டுமென நினைத்த வேலுமணி, அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது, ஜூன் 19ம் தேதி, கொடைக்கானலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த தேதியும் குறித்தார்.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக அரசின் சார்பில் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நடவடிக்கைகளை ஒழுங்காக திட்டமிட்ட வேலுமணி, கொடைக்கானல் செல்வதற்கு, இ-பாஸ் வாங்குவதை தவிர்த்துவிட்டார். அவர் முன்னேற்பாடாக, தாவ் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி, தனது திருமண அழைப்பிதழை ஆதாரமாக கைவசம் வைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு கிளம்பிவிட்டார்.
திண்டுக்கல் அருகே வாகன சோதனையில், அவரது கார் மாட்டிக்கொண்டது, தான் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி என்றும், தனது திருமணத்திற்காக செல்வதாக, போலீசாரிடம், தனது ஐடி கார்டையும், திருமண அழைப்பிதழையும் காட்டியுள்ளார்.
அது போலி ஐடி கார்டு என்பதை அறிந்த போலீசார், அவர்களது பாணியில் விசாரிக்க, தான் போலி ஐஏஎஸ் என்று உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீஸ் அவரை கைது செய்தனர். பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil