ஆன்லைன் மூலமாகவும் மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மே 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
மதுரை நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கை மே 14ம் தேதிக்கு தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்த உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான முடிவுக்கு பின் விசாரிக்கலாம் என தள்ளிவைப்பு.
டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனைள் விதித்து மது விற்க அனுமதித்து உத்தரவிட்டது. ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில், ஆன் லைன் மூலமும் மது விற்க தடை விதிக்க கோரி, மதுரை நுகர்வோர் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது, டாஸ்மாக் கடைகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசுத்தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால், அதன் முடிவை பொறுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறி, விசாரணையை 14 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil