ஊரடங்கு காரணமாக மலேஷியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் மீட்பது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மே 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியாவில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மலேஷியாவில் சிக்கியுள்ள 350க்கும் மேற்பட்ட இந்தியர்களும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மலேஷியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வர, 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என மத்திய அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, மத்திய அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை மே 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil