அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்கள் மிரட்டுகிறார்களா? மீரா மிதுன் புகார்
Meera Mitun : அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். நான் உண்மையே சொல்கிறேன். இந்த டுவிட்டர் பதிவுகளை நான் பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளேன். எனக்கு எவ்வித பயமுமில்லை
அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாக நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் தெரிவித்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, சமூகவலைதளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது.
Advertisment
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பங்கேற்பாளர் என எப்போதும் பிஸியாக இருந்தவர் தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தற்போது அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவு : தமிழகம் பாதுகாப்பானதாகவே உள்ளது. முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் விஜயபாஸ்கரும் தவறான தகவல்களை அளித்து ஊரடங்கு நிலையை பிறப்பித்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளனர். பொருளாதாரம் சீரற்ற நிலையில் இருப்பதே, இந்த ஊரடங்கின் பின்னணியாக உள்ளது. மக்களை அவர்கள் முட்டாளாக்க பார்ப்பதற்காக குறிப்பிட்டு இந்த பதிவை முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டேக் பண்ணியுள்ளார்.
அடுத்த பதிவில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடத்தி பதுக்கிவைத்துள்ள பல்லாயிரம் கோடி அளவிலாவ பணத்தை கைப்பற்றி, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 1 லட்சம் வழங்கி அவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டல் : இதனிடையே, அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். நான் உண்மையே சொல்கிறேன். இந்த டுவிட்டர் பதிவுகளை நான் பிரதமர் மோடிக்கும் டேக் செய்துள்ளேன். எனக்கு எவ்வித பயமுமில்லை. பிரதமர் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீரா மிதுனின் இந்த டுவிட்டர் பதிவுகள், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil