கொரோனா தொற்று காரணமாக நீட் தேர்வு ரத்து – கனிமொழி எம்.பி. கோரிக்கை

Kanimozhi request : நீட் தேர்வு தொடர்பான மன உளைச்சல் காரணமாக அனிதா, மோனிஷா, வைஷ்யா உள்ளிட்ட மாணவர்கள் கடந்த காலங்களில் தற்கொலை செய்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

By: August 19, 2020, 4:49:49 PM

கொரோனா தொற்று என்ற அசாதாரண சூழல் நிலவி வருவதால், மத்திய அரசு, இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஆர்எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ(19). இவர் கடந்த இரண்டு வருடமாக நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 451 மதிப்பெண்கள் பெற்று பல்மருத்துவம் படிக்க சீட் கிடைத்தபோதும் அதை நிராகரித்துள்ளார்.

பொதுமருத்துவம் படிக்க ஆசைப்பட்ட சுபஸ்ரீ இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனிடையே இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்று சுபஸ்ரீ மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுபஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மாணவர்களிடையே மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சுபஸ்ரீயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கனிமொழி, மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கனிமொழி எம்.பி. கோரிக்கை

நீட் தேர்வு தொடர்பான மன உளைச்சல் காரணமாக அனிதா, மோனிஷா, வைஷ்யா உள்ளிட்ட மாணவர்கள் கடந்த காலங்களில் தற்கொலை செய்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown neet exam subasree suicide stress kanimozhi mp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X