corona virus, lockdown, Pm Modi, Edappadi Palanichami, PM-CMs meet, corona tests, medical equipments, financial assistance, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,
தமிழகத்திற்கு கொரோனா பரிசோதளைகளை அதிகப்படுத்த மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.3000 கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், பொருளாதார மீட்பு நடவடிக்கை குறித்தும் பிரதமர் மோடி நேற்று 21 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, பல்வேறு அறிவுரைகளை பிரதமர் வழங்கினார். இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு, டெல்லி உட்பட 15 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவில் உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
முதல்வர் பழனிசாமி கோரிக்கை : தமிழகத்தில் அரசு எடுத்துள்ள கொரரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடியிடம், முதல்வர் பழனிசாமி விளக்கமாக தெரிவித்தார் மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நிதி தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதலாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது பற்றி முதல்வர் அப்போது விளக்கமாக தெரிவித்தார். தமிழக அரசின் உடனடித் தேவைக்கு 2000 கோடி ரூபாய் தேவை என்று ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.
மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக உடனடியாக 3,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும். தேசிய சுகாதார மிஷன் மூலமாக தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக 9,000 கோடி ஒதுக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி மூலமாக வழங்கப்படக் கூடிய கடன் அளவை இரட்டிப்பாக்க வேண்டும், அதற்கு வட்டி வசூலிக்க கூடாது. தமிழக அரசு விலையில்லாமல், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. னவே கூடுதலாக எங்கள் மாநிலத்திற்கு, உணவுப் பொருட்களை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த கூட்டத்தின் போது முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil