நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு நிவாரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
Chennai high court : நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Chennai high court : நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
corona virus, lockdown, relief fund, tamilnadu governemnt, chennai high court, board workers, renewal, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்களுக்கும் புதுப்பிக்காதவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisment
ஊரடங்கின் காரணமாக நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் தெரிவித்தார். குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் மனிதநேய அடிப்படையில் அவருக்கு உதவி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், நேரடியாக வராமல் மறைமுகமாக இதுபோல் அவர்கள் கேட்பதாகவும் மேலும் நலவாரியத்தில் நிபந்தனைகளுக்குட்பட்டு தான் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் நலவாரியத்தில் புதுப்பிக்க தவறியவர்கள் மற்றும் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் விரிவான வாதத்திற்காக வழக்கு விசாரணை வருகிற திங்கட் கிழமை ஒத்தி வைத்துள்ளனர்.
Advertisment
Advertisements
இதேபோல் கோவில்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தினாலும் நாதஸ்வர, தவில் வித்வான்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற வழக்கும் திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil