ஆன்லைன் வகுப்புக்கு தடைகோரிய வழக்கு : சென்னை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு உத்தரவு
Chennai high court : நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீன் (தலைவர்) ஜூன் 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Chennai high court : நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீன் (தலைவர்) ஜூன் 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.
corona virus, lockdown, schools. students, online classes, chennai high court, chennai egmore eye hospital. report, order, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil,
ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை விதிக்கவும் ஆறாம் வகுப்பில் இருந்து 12 ஆம் ஆம் வகுப்புவரை தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்த உத்தரவிட கோரிய வழக்கில் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை தலைவர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
இது தொடர்பாக சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் விமல்மோகன் தாக்கல் செய்த மனுவில், கொரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க, பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி என்ற பெயரில் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் மூலமாக வகுப்புக்களை நடத்தி வருகின்றன. இது மாணவர்களுக்கு மன உளைச்சலையும், உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார். ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான மொபைல் ஃபோன், லேப்டாப் போன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக மொபைல் ஃபோன்களையும், லேப் டாப்களையும் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆன்லைன் வகுப்புக்கள் காலை 9 மணி முதல் மாலை ஆறு மணி நேரம் வரை நடக்கிறது. இதனால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆன் லைன் வகுப்புக்களை நடத்த கூடாது. அந்த இரண்டு மணி நேரத்தில் 40 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவெளி அளிக்க உத்தரவிட வேண்டும் மேலும் இது தொடர்பாக அரசு ஒரு நெறிமுறைகளை உருவாக்க என உத்தரவிட வேண்டும்.
ஆன் லைன் வகுப்பு தொடர்பாக மத்திய அரசு வகுத்த வரைவு விதிமுறைகளை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதில்லை. மொபைல்போன்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து கண் மருத்துவ நிபுணர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன், தொடர்ந்து மாணவர்கள் மொபைல் ஃபோன்களையும், லேப் டாப்களையும் பார்த்தால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கு மேல் மொபைல் ஃபோன்களையும், லேப் டாப்களையும் பார்த்தால் மாணவர்களின் கண் பார்வை பாதிக்கப்படுவதாகவும் எனவே இது தொடர்பாக அரசு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் மேலும் கண் பாதிப்பு தொடர்பாக கண் மருத்துவ நிபுணர்கள் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீன் (தலைவர்) ஜூன் 25 ஆம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil