சுவிக்கியில் வீடு தேடி வரும் பால்; எப்படி ஆர்டர் செய்வது? இதோ வழிமுறை
Aavin milk : சென்னை மக்களுக்கு விரைந்து ஆவின் பால், பால் பொருட்களை டெலிவரி செய்யும் பொருட்டு, 21 அவுட்லெட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
corona virus, lockdown, tamil nadu, chennai, aavin milk, swiggy, online order, swiggy delivery, aavin milk products, home delivery, swiggy app, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், சுவிக்கி நிறுவனத்துடன் இணைந்து தங்களது வாடிக்கையாளர்ளுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisment
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, பொது மக்களுக்குத் தேவைப்படும் இடங்களில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தற்காலிகமான ஆவின் கடைகள் அமைத்தும் நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
Advertisment
Advertisements
இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்காமல் கஷ்டப்படும் சென்னை மக்களுக்கு இனிய வரப்பிரசாதமாக சுவிக்கி மூலம் ஆர்டர் செய்தால், பால், பால் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுட்லெட்கள்
சென்னை மக்களுக்கு விரைந்து ஆவின் பால், பால் பொருட்களை டெலிவரி செய்யும் பொருட்டு, 21 அவுட்லெட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆர்டர் செய்வதற்கான வழிமுறை
சுவிக்கி மொபைல் ஆப்பை திறந்துகொள்ள வேண்டும்
அதில் Aavin Store பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்
அதில் Groceries பகுதியில் தங்களுக்கு தேவையான ஆவின் பொருட்களை தேர்வு செய்து ஆர்டர் செய்யவும்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil